முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

187

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
வேளாண் கடன் தள்ளுபடி, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 2வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளை சங்கிலியால் கட்டி நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். விவசாயிகளுக்கு என்தேசம் என் உரிமை உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சந்தித்து பேசினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு நிலுவைத்தொகை, கடன்தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக கூறினார்.
இதனை தொடர்ந்து, போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 2 மாதத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.