முதல்வர், அமைச்சர்களின் இணைய முகவரி நீக்கப்பட்ட விவகாரம்-ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

298

அரசு இணையதளத்தில் இருந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இணையதள முகவரி நீக்கப்பட்டது குறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அரசு இணைய தளத்தில் இருந்து முதலமைச்சர், அமைச்சர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் நீக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரியப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அமைச்சர்களின் இணைய தள முகவரிகளை அரசு இணைய தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் விபரம் தெரிந்து தான் நீக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினர். தொழில்நுட்பம் அல்லது மென்பொருள் கோளாறால் தகவல்கள் நீக்கப்பட்டதா என கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, வரும் 21ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.