தமிழகத்தை அதிமுக நிரந்தரமாக ஆட்சி செய்யும் – முதலமைச்சர் பழனிசாமி!

328

தமிழகத்தை அதிமுக நிரந்தரமாக ஆட்சி செய்யும் என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இரட்டை இலைச் சின்னம் தங்கள் அணிக்கு நிச்சயம் கிடைக்கும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,
போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை மன வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார். இரட்டை இலை சின்னம் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் விரும்பும் வகையில் அரசும், ஆட்சியும் செயல்பட்டு வருவதாக கூறினார். அதிமுக அரசு தமிழகத்தில் தொடரும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.