வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளதாக உச்சநீதிமன்றம் தகவல்..!

227

வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் இருப்பதாக சாந்திபூஷன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷண் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வச்தது. அப்போது உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் அனைத்து அதிகாரமும் கொண்டவர் தலைமை நீதிபதி மட்டுமே என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் தலைமை நீதிபதிக்கு பதிலாக 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் தீர்ப்பை ஒதுக்கக்கோரிய மனுவையும் நிராகரித்தனர். 5 நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து வழக்கை ஒதுக்குவதில் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தனர்.