செய்த தவறை சுட்டிக்காட்டினால் இனக் கலவரத்தை தூண்டும் பிரதமர்..!

241

செய்த தவறை சுட்டிக்காட்டினால், இனக் கலவரத்தை தூண்ட பிரதமர் மோடி முயற்சிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.

சிதம்பரம் அருகே சீரப்பாளைத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தேர்தலில் மூலம் தமிழகத்தில் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று, அதன் மூலம் ஒரு புதிய ஆட்சியை அமைப்போம் என்றார்.