ப.சிதம்பரம் தெரிந்தே விதிமுறைகளை மீறியுள்ளார் : சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

216

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் தெரிந்தே விதிமுறைகளை மீறியுள்ளார் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்வதற்கு சட்டத்தை மீறி ஓப்புதல் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் மகன் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் ப.சிதம்பரம், உள்பட 16 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ப. சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். அவர் அளித்த பதில்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். சிதம்பரத்தின் அளித்த வாக்குமூலத்தில் ஆட்சேபனைகளை தெரிவித்த சிபிஐ, அந்நிய முதலீடு குறித்து எதுவும் முன்மொழியாததால் ப.சிதம்பரம் தெரிந்தே விதிமுறைகளை மீறியுள்ளார் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.