பிரதமர் மோடி யாருடைய கருத்தையும் கேட்பதில்லை – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு ..!

448

பிரதமர் மோடி தான்தோன்றி தனமாக செயல்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இந்நிலையில், ட்விட்டரில் புதிதாக கருத்து தெரிவித்துள்ள அவர், புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக தொழில்முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார சீர்த்திருத்தம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனின் கருத்தை மத்திய அரசு மதிப்பதில்லை என்று கூறியுள்ள ப.சிதம்பரம், பிரதமர் மோடி யாருடைய பேச்சையும் கேட்காமல் தான்தோன்றிதனமாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.