முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்தது குறித்து சிபிஐ விசாரணை..!

1165

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி? என சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கு தொடர்பாக, 2013-ஆம் ஆண்டில், சிபிஐ தயாரித்த வரைவு அறிக்கையின் நகல்கள், டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து, சிபிஐ-க்கு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த அறிக்கையின் நகல்கள், சிதம்பரத்துக்கு எப்படி கிடைத்தன என்பது தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பெரும் பகுதி தற்போது சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ள சிபிஐ அதிகாரிகள். இந்த ஆவணங்கள் சிதம்பரத்திற்கு எப்படி கிடைத்தது? என விசாரித்து வருவதாக கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லியில் இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், ரகசிய ஆவணங்கள் குறித்து சிபிஐ கேள்வி எழுப்பினால் பதிலளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.