ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது..!

415

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.ஐ.என்.எக்ஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து, அவர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். லண்டனிலிருந்து சென்னை திரும்பிய அவரை விமானநிலையத்திலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லி அழைத்து செல்ல உள்ளனர்.