சென்னை விமானநிலைய நுழைவு வாயிலில் 66வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்சியடைந்தனர்.

210

சென்னை விமானநிலைய நுழைவு வாயிலில் 66வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்சியடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு விமான நிலைய முனையம் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அவசரக் கோலத்தில் திறந்துவைக்கப்பட்டது. திறக்கப்பட்ட 6 மாதத்திற்குப் பின்னரே பயன்பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள் உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடைமேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால் பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 64 முறை விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்தும், கண்ணாடிகள் உடைந்தும் விழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் 16 மற்றும் 17வது நுழைவு வாயில்களில் 66வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றாலும் சென்னை விமான நிலையத்தில் தொடரும் விபத்துக்களால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.