சென்னையில் நடைபெற்ற திருவையாறு நிகழ்ச்சியில் ஷோபா சந்திரசேகரின் இசை நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

210

சென்னையில் நடைபெற்ற திருவையாறு நிகழ்ச்சியில் ஷோபா சந்திரசேகரின் இசை நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இசை கலைஞர்கள் பங்கேற்கும் பாரம்பரிய கலை விழாவான திருவையாறு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. விழாவில் பரதநாட்டியம், இசை கச்சேரி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகிகள் ஷோபா சந்திரசேகர் மற்றும் அருணா சாய்ராம் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களின் இசைக்கச்சேரி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.