சென்னையில் சோதனை அடிப்படையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

337

சென்னையில் சோதனை அடிப்படையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கழக ஊழியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சங்கங்களுடன் ஆன பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கூறினார். சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், இதன் மாதிரி ஓட்டம் விரைவில் தொடங்கும் என கூறினார். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும் என உறுதியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறையில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.