சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் கைது..!

188

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை சேர்ந்த 11 பேரை கைது செய்த போலீசார் 92 போலி பாஸ்போர்ட்டுகள்,மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் போலி பாஸ்போர்ட்டு தயாரிக்கப்பட்டு வருவதாக போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கூடுதல் உதவி ஆணையாளர் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பேரில், டிராவல்ஸ் உரிமையாளர் வீரகுமார், அவரது சகோதரர் பாலசுப்ரமணியன், தொழிலாளர்கள் கார்த்திகேயன், சரவணன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 92 போலி பாஸ்போர்ட், 85ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்னதர்.