சென்னையில் 6 ஆயிரத்து 402 கோடி செலவில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து துறை கொள்கை விளக்க….

293

சென்னையில் 6 ஆயிரத்து 402 கோடி செலவில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை 43 புள்ளி 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு வழித்தடங்களில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
முதல் வழித்தடம் பூந்தமல்லி-கத்திப்பாரா வரை இணைப்புடன் போரூரில் இருந்து வடபழனி வரை 3 ஆயிரத்து 276 கோடியில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது வழித்தடம் வண்டலூர் – வேளச்சேரி இடையே 3 ஆயிரத்து135 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தை 2026ம் ஆண்டிற்குள் 46 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.