சென்னை மெரினா கடற்கரை சாலையில் வந்த அரியவகை ஆந்தையை போக்குவரத்து காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

184

சென்னை மெரினா கடற்கரை சாலையில் வந்த அரியவகை ஆந்தையை போக்குவரத்து காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த அரிய வகை ஆந்தை ஒன்று வந்தது. மரத்தில் அமர்ந்திருந்த அந்த ஆந்தையை காக்கைகள் தாக்கியதால் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில், பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் காயமடைந்த ஆந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த அரியவகை ஆந்தையை சாலையில் சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மீட்கப்பட்ட ஆந்தை கிண்டியில் உள்ள சிறுவர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப் பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.