எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக சென்னை காசிமேட்டை சேர்ந்த 50 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்து…

310

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக சென்னை காசிமேட்டை சேர்ந்த 50 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
ஆந்திரா அருகே கொள்ளக்குடி என்ற இடத்தில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆந்திர மாநில மீனவர்கள் தமிழக மீனவர்களை ஆயுதங்களால்
தாக்கினர். மேலும், ஆத்திரம் அடங்காத ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் ஐம்பது பேரை அவர்களின் ஐந்து விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். இதையடுத்து, உயிர் பிழைத்தால் போதும் என மற்ற மீனவர்கள் அவசரம் அவசரமாக கரைதிரும்பினர். இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மீனவர்களும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.