தமிழகம் மிக மோசமான நிலைக்கு செல்ல திமுக, அதிமுக கட்சிகளே காரணம் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

367

தமிழகம் மிக மோசமான நிலைக்கு செல்ல திமுக, அதிமுக கட்சிகளே காரணம் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தினகரன் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பொன். ராதாகிருஷ்ணன், தமிழகம் மிகவும் மோசமான நிலைக்கு செல்ல திராவிட கட்சிகளை காரணம் என்று விமர்சித்தார்.