குற்றச்சம்பங்களை தடுக்க 85 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

149

சென்னையில் குற்றச்சம்பங்களை தடுக்க 85 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளளார்.

சிசிடிவி பொருத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை அண்ணா நகர் பூங்காவில் பூங்காவில் நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஏ.கே.விஸ்வநாதன், சென்னையில் சிசிடிவி இல்லாத பகுதியே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சிசிடிவி பொருத்துவதை சென்னை காவல் துறை ஒரு இயக்கமாக மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 85 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் எனவும் ஏ.கே.விஸ்வநாதன் உறுதியளித்தார்.