26 மணி நேரத்தில் ஒரு சரக்கு கப்பலில் 4,562 கன்டெய்னர்கள் சென்னை துறைமுகம் சாதனை!!

222

சென்னை துறைமுகத்தில் ஒரு சரக்கு கப்பலில் 26 மணி நேரத்தில் 4,562 கன்டெய்னர்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் டி.பி. வேர்ல்டு என்ற சரக்கு முனையம் உள்ளது. இங்கிருந்து கப்பல்கள் மூலம் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
முதல்முறை
இந்த சரக்கு முனையத்தில் இருந்து எம்.வி. மெயர்ஸ்க் செனாங் என்ற சரக்குக் கப்பலில் 4,562 சரக்கு கன்டெய்னர்கள் கடந்த 26 மணி நேரத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
26 மணி நேரத்துக்கு இவ்வளவு அதிகமாக சரக்கு கன்டெய்னர்கள் கப்பலில் ஏற்றப்பட்டது இதுதான் முதல்முறை. இந்த சரக்குகள் சிங்கப்பூர், பூசன், தான்ஜூங், பெலபாஸ், கிங்டா, ஜிங்சாங், ஷாங்காய், நான்ஷா ஆகிய துறைமுகங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்ககவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.