சென்னை காமராஜர் சாலையில் பேரிகார்டை இழுத்து சென்ற இளைஞர்களில் ஒருவர் கைது!

153

சென்னை காமராஜர் சாலையில் பேரிகார்டை இழுத்து சென்ற இளைஞர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மெரினா காமராஜர் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்துச் சென்றனர். மர்ம நபர்களின் இந்த விஷமச் செயல் இணைய தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து இவர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ரேஸில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இரவு நேரங்களில் அதிக பைக் ரேஸ் நடப்பதால் காவல்துறையினர் தீவிர சோதனையில் நடத்தி வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், முக்கிய சாலைகளில் ரேஸ்களை தடுக்கவும், குடிபோதையில் வண்டி ஓட்டுபவர்களையும் தடுக்கவும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.