அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

221

மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடதமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.