தென் தமிழக கடலோர மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

738

தென் தமிழக கடலோர மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவையில் ஒரு சில பகுதிகளிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.