வர்தா புயல் சென்னையை தாக்கியதில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், தங்களுக்கு வீடு கட்டி தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

215

வர்தா புயல் சென்னையை தாக்கியதில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், தங்களுக்கு வீடு கட்டி தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வர்தா புயல் தாக்கியதில் சென்னை சின்னாபின்னமானது. புயலினால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சாலையோரம் குப்பைகள் போன்று ஏராளமான மரங்கள் இன்னும் அப்புறப்படுத்தாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், புயலால் வீடுகளை இழந்தவர்கள், தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுங்கம்பாக்கம் பகுதியில் சாலையோரம் விழுந்த மரங்களை பொதுமக்களே முன்வந்து அகற்றி வருகின்றனர். இத்தகைய தருணத்தில் அரைசை எதிர்பார்க்காமல் தாமே முன்வந்து மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.