சென்னையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

272

சென்னையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான உணவகம் ஒன்று உள்ளது. உணவகத்தின் தரைத்தளத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, விஷவாயு தாக்கி தொழிலாளர் சதீஷ் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்க போன ராமகிருஷ்ணன், வினய் ஆகியோரும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்ககாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த மூன்று பேரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.