சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து | அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

149

சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி அடிக்கடி உடைந்து விழுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் இன்று காலை உள்நாட்டு விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள கண்ணாடிகள் திடீரென உடைந்து விழுந்தன. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் உள்ள கண்ணாடி 75வது முறையாக உடைந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.