சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 17 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

139

சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 17 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிங்கப்பூருக்கு செல்லும் பயணி ஒருவரின் பையை சோதனை செய்ததில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சாகுல்ஹமீது என்பதும், அவர் சென்னை பெரம்பூரில் வசிப்பதும் தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.