சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்!

401

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
வரும் 18 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து வெளியாக உள்ளது. இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய் அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மெர்சல் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் வழங்காதது குறித்து முதலமைச்சரிடம் விஜய் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திரையரங்க கட்டண உயர்வுக்கு அனுமதியளித்ததற்கும், கேளிக்கை வரியை குறைத்ததற்கும் முதலமைச்சரிடம் விஜய் நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – நடிகர் விஜய் இடையிலான சந்திப்பின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.