தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

486

தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக வடதமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவே இன்றும் வடதமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகரித்து வந்த வெப்பம் தணிந்ததையடுத்தது, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.