சென்னையில் இருந்து திருச்சி–திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில்கள்! தென்னக ரெயில்வே அறிவிப்பு!!

387

சென்னை, ஆக.6–
சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:–
திருச்சி, -சென்னை, எழும்பூர் சிறப்புக் கட்டண ரெயில்
ரெயில் எண் 06024: ஆகஸ்டு 13ஆம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரெயில் எண் 06023: ஆகஸ்ட் 16ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இந்த ரெயில் அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்புக் கட்டண ரெயில்
ஆகஸ்டு 26ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரெயில் எண் 06002: ஆகஸ்டு 28ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி (வழி: மயிலாடுதுறை, கும்பகோணம்) சிறப்பு ரெயில் எண் 06025: ஆகஸ்டு 13ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.