பெருமாள் திருக்குடை ஊர்வலம் பாரிமுனையிலிருந்து துவங்கியது..!

307

சென்னையில் நடைபெறும் புகழ்பெற்ற பெருமாள் திருக்குடை ஊர்வலம் பாரிமுனையிலிருந்து தொடங்கியது.

ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பாக மேளதளத்துடன் பெருமாள் திருக்குடை ஊர்வலம் பாரிமுனையில் அமைந்துள்ள ஶ்ரீ கேசவ பெருமாள் திருக்கோவிலில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலத்திற்கு அறங்காவலர் கோபால்ஜி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஶ்ரீவிவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் ஶ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மஹராஜ், விசுவ ஹிந்து வித்யா கேந்திராவின் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.கிரிஜா சேஷாத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஊர்வலத்தில் திருமாலின் பத்து அவதாரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பத்து அவதாரங்களின் திருவுருவச் சிலையும், பன்னிரண்டு ஆழ்வார்களை பெருமைபடுத்தும் வகையில் அவர்களது பன்னிரண்டு சிலைகளையும் திருப்பதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

இந்த ஊர்வலமானது இன்று காலை பத்து 30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு யானை கவுனியை சென்றடையும். ஊர்வலம் வரும் 16ஆம் தேதி பகல் 12 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ஊர்வலத்தில் கொண்டு செல்லும் பெருமாளின் திருக்குடை திருப்பதி தேவஸ்தானத்தில் சமர்ப்பணம் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.