காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜகவால் முடியாது…!

124

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற சட்டவிரோத திட்டங்களை மக்களை அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டாவது முறையாக மத்தியில் பொறுப்பேற்ற பின், ஜனநாயக விரோதச் செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். கர்நாடகா உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி, பணத்தைக் காட்டி, பாஜகவினர் அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகத் திருநாவுக்கரசர் கூறினார். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கட்சி என நாட்டைத் துண்டாக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருவதாகவும், சில எம்.எல்.ஏக்களை இழுப்பது மூலம் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜகவால் முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.