சென்னை அருகே 90 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு.

192

சென்னை அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 90 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரத்தை அடுத்த கே.கே. ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில், இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த 90 பவுன் நகைகள், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை கொள்ளையபோயிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும், இது குறித்து தனிப்படை அமைத்து மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.