பிறந்த நாளன்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை..!

368

கொளத்தூரில் பிறந்த நாளன்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 36வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். கட்டிடத் தொழில் செய்து வரும் இவரது மகள் மாலதி, தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் வீட்டில் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். அதன்பின்னர் தந்தை பாஸ்கரிடம் பிறந்த நாள் பரிசாக செல்போன் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், பிறகு வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாலதி தனி அறைக்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார். மகளை காப்பாற்ற சென்ற பாஸ்கருக்கு கை, கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.