தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

229

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில், உள்ளாட்சித் துறைக்கு உட்பட்ட ஊரக வளர்ச்சி கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர், சாலை, ஊரக வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, குடிநீர் விநியோகம், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றார்.

அனைத்து ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலர்களும் மக்களை நேரடியாக சந்தித்து இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும் என எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார். குழாய் மூலம் 99 சதவீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், 28 மாவட்டங்கள் திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.