சென்னை சவுக்கார்பேட்டையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக இன்று அதிகாலை துவங்கியது!

279

சென்னை சவுக்கார்பேட்டையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக இன்று அதிகாலை துவங்கியது.
சென்னை சவுக்கார்பேட்டையில் ஜெயின் சமூகத்தினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மகாவீரர் துறவறம் பூண்ட தினத்தை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இன்று அதிகாலை 4 மணி முதலே தீபாவளி பண்டிகையை அவர்கள் கொண்டாட தொடங்கினர். தங்களது கோயில்களுக்கு சென்று வழிப்பாடு நடத்திய அவர்கள், பின்னர் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர்.
இதையடுத்து இனிப்புகள் பறிமாறி கொண்டும், மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகளை ஒருவர்கொருவர் தெரிவித்துகொண்டனர்.