சென்னை புறநகர் ரயில்கள் இன்றும், நாளையும் கூடுதலாக இயக்கப்படும் – தெற்கு ரயில்வே!

386

சென்னை புறநகர் ரயில்கள் இன்றும், நாளையும் கூடுதலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
3 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் சேவை முடங்கியுள்ளதால் மின்சார ரயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. எனவே மக்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்றும் நாளையும், 670 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை-திருவள்ளூர், அரக்கோணம் இடையே சனி, ஞாயிறுகளில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி சூலூர்பேட்டைக்கு கூடுதல் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதனிடையே நேற்று ஒரே நாளில் 14 லட்சம் பேர் மின்சார ரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.