சென்னை மத்திய புழல் சிறையில் கைது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

279

சென்னை மத்திய புழல் சிறையில் கைது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கைதிகள் எண்ணிக்கை சரிபார்ப்பின்போது, ஷேக் அப்துல்லா அவரது அறையில் இல்லாததை அறிந்த காவலர்கள் சிறை வளாகத்தில் தேடிப் பார்த்தனர். அங்குள்ள மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து ஷேக் அப்துல்லாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.