ரூ5.5 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

128

இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டியை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து இன்று அதிகாலை சென்னைக்கு விமானம் வந்தது. அதில் பயணி ஒருவர் தங்கத்தை கடத்திக் கொண்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் தங்கத்தை உருக்கி கைப்பைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் கடத்தி வரப்பட்ட 160 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.