மத்திய, மாநில அரசுகளுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்..!

97

கல்வி, மருத்துவம், தண்ணீரை விற்பனை செய்யும் மத்திய, மாநில அரசுகளுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சீமான் உரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஷெரீனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கென்று ஒரு கட்சி இருக்கக் கூடாது. அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மக்கள்தான் ஆள வேண்டும் என தெரிவித்தார். மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில் நடத்தி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார்கள். வெளிநாடுகளில் முத்திரை குத்தி ஓட்டு போடும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதை ஏன் இங்கே அமுல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.