ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில கல்விக்கண்காட்சி..!

428

இந்திய மாணவர்கள் குறைந்த செலவில் மருத்துவம் மற்றும் பொறியியல் பயில வழிகாட்டும் கல்விக் கண்காட்சி, ரஷ்ய பண்பாடு மையத்தில் நடைபெறுகிறது.

Study Abroad நிறுவனம், தனது 20-வது கல்விக் கண்காட்சியை, ரஷ்ய பண்பாட்டு மையத்துடன் இணைந்து,நடத்தி வருகிறது. சென்னையில் ரஷ்ய பண்பாட்டு மையத்தில் நேற்று தொடங்கிய இக்காண்காட்சி, இன்று மாலை வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில்,10 ரஷ்ய பல்கலைக்கழகங்கள் பங்கேற்றுள்ளன. ரஷ்யாவில்,இந்திய மாணவர்கள் குறைந்த செலவில் மருத்துவம் மற்றும் பொறியியல் பயில மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.