சென்னை ராயப்பேட்டையில் தாய் மற்றும் 3 மகள்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 4 பேரும் தன்னை அடிமை போல் நடத்தியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

190

4 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சின்னராஜ், பாண்டியம்மாளின் மூத்த மகள் பவித்ரா மீது ஆசைப்பட்டுள்ளார். இதற்காக பாண்டியம்மாளிடம் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பல முறை கேட்டுள்ளார்.

ஆனால் தனக்கு கணவராக வாழ்ந்துகொண்டு, மகளை எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என பாண்டியம்மாள், சின்னராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சின்னராஜுக்கு, பாண்டியம்மாள் மீது விரோதம் ஏற்பட்டுள்ளது. 4 பேரில் பாண்டியம்மாளை முதலில் கொலை செய்த சின்னராஜ், பின்னர் பவித்ராவை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதற்கான தடயங்கள் சிக்கியிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, இதை உறுதி செய்ய முடியும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த சில துப்புகள், போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக போலீஸார், சின்னராஜிடம் விசாரணை செய்து வருகின்றனர்.