சென்னை ராயபுரத்தில் கொளுத்தும் வெயிலில் 5 மணிநேரம் காத்திருந்த பொது மக்கள் !

402

சென்னை ராயபுரம் பகுதியில் அரசு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைகக அமைச்சர் ஜெயக்குமார் வராதநிலையில், விழா ஒருங்கிணைப்பாளர்களால் அழைத்துச்செல்லப்பட்ட பொதுமக்கள், முதியோர் கொளுத்தும் வெயிலில் 5 மணிநேரம் காத்திருந்ததால், பெரும் வேதனை அடைந்தனர்.
சென்னை ராயபுரம் 48வது வட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகியவற்றை அரசு சார்பில் திறந்து வைக்க அமைச்சர் ஜெயக்குமார் வருகை தரவுள்ளதாக கூறி, விழா ஒருங்கிணைப்பாளர்கள் அப்பகுதி பொதுமக்களை அழைத்துச்சென்றுள்ளனர். காலை பத்து மணி முதல் பொதுமக்களும், முதியோர்களும் பிற்பகல் 3 மணி வரை கொளுத்தும் வெயிலில் காக்க வைக்கப்பட்டனர். கடைசி வரை அமைச்சர் வராதநிலையில், பொதுமக்கள் கலைய முயன்றபோது, விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.