சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

629

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இடைவேளை விட்டு மழை பெய்து வருவதால், இதமான சூழல் நிலவுகிறது. திடீர் மழையால் சென்னை நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.