லோக் அதாலத் மூலம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100 கைதிகள் விடுதலை…!

168

லோக் அதாலத் மூலம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் நசீர் அகமது தலைமையில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 13 நீதிபதிகள் 171 வழக்குகளை ஒரே நாளில் விசாரித்து முடித்து வைத்தனர். அப்போது 127 கைதிகள் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து தீர்வு காணப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 100 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.