ஆண்கள் பிறப்பு உறுப்பை அறுத்து கொலை செய்யும் கொடூரம்

398

சென்னையில் ஆண்களின் பிறப்பு உறுப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோ கொலைக்காரனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை மாதவரம் பகுதியில் கடந்த மாதம் 25-ம் தேதி சாலையோரம் படுத்துறங்கிய அஸ்லாம் என்ற நபரின் பிறப்பு உறுப்பை அறுத்துவிட்டு ஒருவர் தப்பியோடினார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்லாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கடந்த 2-ம் தேதி ரெட்டேரியில் நாராயண பெருமாள் என்பவரின் பிறப்பு உறுப்பை அறுத்து சைக்கோ கொலைகாரன் தப்பிச்சென்றான். இந்த சைகோவை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே சைக்கோ கொலைகாரனின் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரிய வந்தது. இந்தநிலையில், சைக்கோ நபரை வில்லிவாக்கத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் மானாமதுரையை சேர்ந்த முனுசாமி என்பதும், ஓரினச் சேர்க்கைக்காக ஆசைகாட்டி, ஆண்கள் பிறப்பு உறுப்பை அறுத்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.