18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோர் மீது நடவடிக்கை – சென்னை காவல் துறை

297

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெரு நகரின் பல்வேறு சாலைகளில் சிறுவர்கள், பெற்றோர்களின் வாகனங்களை ஓட்டுவதும், பந்தயங்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
இதனால், விபத்துக்கள் ஏற்பட்டு, சிறுவர்கள் பாதிக்கப்படுவதோடு, மற்றவர்களும் பாதிப்பு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாத 18 வயதுக்கு குறைவான சிறார்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி, சிறார்கள் வாகனம் ஓட்ட அனுமதித்தால், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.