சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் யூகி பாம்ப்ரியும் மோதுகின்றனர்.

160

சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் யூகி பாம்ப்ரியும் மோதுகின்றனர்.

சென்னை ஓப்பன் ATP டென்னிஸ் போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், இஸ்ரேலின் Sela-வும், போஸ்னியாவின் Dzumhur-ரும் மோதினர். இதில் 6க்கு2, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில், Dzumhurஐ வீழ்த்தி, Sela வெற்றி பெற்றார். இதனிடையே, இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சுவீடனின் Brunstrom – Siljestrom இணையிடம், 6-2, 6-4 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி – விஷ்ணு வர்தன் இணை அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை நடைபெறும் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சகநாட்டு வீரர் யூகிபாம்ரியை எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில், இந்திய வீரர் ஷகீத் மைனேனியும், ரஷ்யாவின் Youzhny-யும் மோதுகின்றனர்.