வேலை வாங்கி தருவதாக , இணைய தளத்தில் விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்ட, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

207

சென்னையை அடுத்த, கொளத்தூர் கண்ணபிரான் நகரில் செயல்பட்டு வந்த
தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம், பிரபல மென்பொருள் நிறுவனங்களில் , வேலை வாங்கி தருவதாக இணைய தளங்களில் விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டவர்களிடம், முன் பணத்தை பெற்றுக் கொண்டு, போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றி வந்தததாக தெரிகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் அருண்விஜயகுமார் என்பவர், பிரபு என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 50 ஆயிரம் ரூபாயை வாங்கும்போது, ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்த சிலர் அருணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலீசார் அருண் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.