100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு சென்னையில் நடைபெற்றது.

182

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு சென்னையில் நடைபெற்றது.
மெட்ராஸ் மோட்டார் ஹெரிடேஜ் கிளப் நடத்திய 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் அணிவகுப்பு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த பேரணியை நடிகர் ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்றும் வரும் இந்த கார் பேரணியில், பாரம்பரிய கலை அம்சம் கொண்ட 100க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 25 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றன. இதில் 1920-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன.வாகன வல்லுநர்களால் பார்வையிடப்பட்டு, சிறந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.