சென்னையில் நேற்று நடைபெற்ற கொலைகளுக்கும், கூலி படைகளுக்கும் சம்பந்தம் இல்லை என, சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

199

சென்னையில் நேற்று மட்டும் 7 கொலைகள் நடந்ததால், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்துள்ள 7 கொலைகளும் தனிப்பட்ட விரோதத்தால் நடந்திருப்பதாகவும், கூலிபடையினர் இதில் ஈடுப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
அத்துடன், கொலை குற்றவாளிகளை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரவு 10 மணிக்கு மேல் மதுபான கடைகள் திறந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ராஜேந்திரன், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க ரோந்து வாகனங்களை அதிகபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.